கோபி அருகே செந்நாய் கடித்து 3 ஆடுகள் பலி

கோபி : கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியில் செந்நாய் கடித்து 3 ஆடு, ஒரு சேவல் பலியாகின.கோபி அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (36). கூலித்தொழிலாளியான இவர் 4 ஆடுகள் ஒரு சேவல் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் கால்நடைகளை  வழக்கமான மேய்ச்சலில் ஈடுபடுத்தி ஒரு  கட்டிடத்தில் கட்டி வைத்துவிட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வந்தபோது, 3 ஆடுகள் மற்றும் ஒரு  சேவலை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்று இருப்பதும், ஒரு ஆடு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறை மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை, காவல்துறையினர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கவில்லை என்பதும், செந்நாய் கடித்து இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மர்ம விலங்கு கடித்ததில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: