800 கி.மீ. பயணித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது வடகொரியா!: கிம் அரசுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்..!!

வடகொரியா: 2017ம் ஆண்டிற்கு பிறகு மிகவும் ஆற்றல் வாழ்ந்த ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்திருப்பது அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே வடகொரியா ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வருகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கிம் ஜாங் உன் அரசு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரேமாதத்தில் வடகொரியா 7வது முறையாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது.

அதில் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையும் அடக்கம். இந்நிலையில் 2000 கி.மீ. உயரத்தில் சுமார் 800 கி.மீ. தூரம் சென்று இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா சோதித்து பார்த்துள்ளது. வடகொரியாவின் வடக்கு கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சுமார் அரைமணி நேரம் விண்ணில் பறந்து ஜப்பான் எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் விழிந்திருப்பதாக அண்டை நாடுகளான ஜப்பானும், தென்கொரியாவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டிருப்பதாக வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகங்களில் படத்துடன் தகவல் வெளியிடப்பட்டது. இது ஒரே மாதத்தில் வடகொரியா சோதித்து பார்த்திருக்கும் 7வது ஏவுகணையாகும். வடகொரியாவின் அடுத்தடுத்த ஏவுகணை சோதனைகளால் கொரிய தீப கர்பத்தில் பதற்றம் அதிகரித்திக்கும் நிலையில், வடகொரியாவுக்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: