ஜான்பாண்டியன் அறிவிப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமமுக தனித்து போட்டியிடும்

நெல்லை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ம் தேதி நடக்கிறது. உள்ளாட்சி பதவி என்பது மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் ஒரு வாய்ப்பாகும்.  மக்களின் அன்றாட பிரச்னைகளை தெரிந்து கொண்டு, அதை தீர்த்து வைக்க மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் இந்த வாய்ப்பை,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி, தனித்து போட்டியிட்டு வெற்றி பெற மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் உணர்வோடு களப்பணியாற்ற வேண்டும்.  தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள், நிர்வாகிகள் தங்களின் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களிடம் விருப்ப மனுவை அளிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் விருப்பமனு பட்டியலை கட்சியின் தென் தலைமை அலுவலகத்திற்கு பிப்.4ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: