திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் திருவூர் ஊராட்சியில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் கிளை தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர், வை.சுந்தர் எனகிற துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.திலீப்ராஜ், ஊராட்சி துணைத் தலைவர் கோ.கிரி ஆகியோர் வரவேற்றனர். திருவூர் ஈட்டி சிலம்ப கலைக் கூடம் கிளையை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.