குத்தாலம் : குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் பின்புறம் மணவெளி தெருவில் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 6 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம் என்பவர் கட்டுப்பாட்டில் (பகுதி) உள்ளது. இந்த இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன் என்பவர் வாங்கி உள்ளார். ஆனால் பகுதி மாற்றம் செய்யப்படவில்லை. கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு ரூ.14 லட்சம் வாடகை செலுத்தாததால் கடந்த 2016ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.