குழந்தைகளுக்கு எதிரான வன்முறை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி

பொன்னேரி: மீஞ்சூர் அருகே புதுப்பேடு கிராமத்தில் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடத்துக்கு நேற்று மாலை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வந்தார். அங்கு அவரது தந்தை மறைந்த என்.பெரியசாமியின் சிலை வடிவமைக்கும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தமிழக முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மேலும், பெண் சிசுக்கொலை, குழந்தைகள் திருமணம் குறித்த புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்கும் பெண்கள், மன்றக் கூட்டங்களில் பங்கேற்று மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  இதில் தங்கள் குடும்பத்தினர் தலையிட பெண்கள் அனுமதிக்காமல், தங்களின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தை பாஜ அரசியலாக்க விரும்புகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

Related Stories: