நிர்வாக ரீதியாக பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்


சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் பல்வேறு நிர்வாகங்களின்கீழ் செயல்படும் பள்ளிகளின் தேர்ச்சி குறித்த விவரங்கள் வருமாறு:
* அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மூலம் 2 லட்சத்து 8ஆயிரத்து 57 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 925 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.77 சதவீதம்.

* அரசுப் பள்ளிகளின் மூலம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 833 பேர் எழுதினர். இவர்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 81 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 87.90 சதவீதம்.

* தனியார் பள்ளிகளின் மூலம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 374 பேர் தேர்வு எழுதியதில், 2 லட்சத்து 51 ஆயிரத்து 737 பேர் தேர்ச்சி பெற்றனர்.

* ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் மூலம் 5834 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 4940 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 84.68 சதவீதம்.

* மாநகராட்சி பள்ளிகளின் மூலம் 11629 பேர் தேர்வு எழுதியதில் 9823 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 84.47%.

* வனத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் மூலம் 143 பேர் எழுதியதில் 130 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.91%.

* கள்ளர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை சேர்ந்த 2157 பேர் தேர்வு எழுதியதில் 1979 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.75%.

* நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை சேர்ந்த 8347 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் 7189 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 86.13%.

* சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் மூலம் 342 பேர் எழுதினர். இவர்களில் 296 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 86.55%.

* மலைவாழ் மக்கள் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இருந்து 1828 பேர் தேர்வு எழுதியதில் 1690 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 92.45%.

The post நிர்வாக ரீதியாக பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் appeared first on Dinakaran.

Related Stories: