குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு

திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் குப்பையை எரிப்பதால் விபத்து அபாயம் நிலவுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளன. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் திரையரங்குகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சில மாதங்களாக இந்த பகுதியில் சேரும் குப்பைகளை திரையரங்கின் அருகில் துப்புரவு பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். பின்னர் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர்.

இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையில் படரும் புகையால் விபத்து அபாயமும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு சுவாச பிரச்னைகள் ஏற்படும் அவலம் நிலவுகிறது. பொதுமக்கள் நலன் கருதி, குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: