நடிகை தமன்னாவுக்கு 2 ஆண்டு கழித்து திருமணம்

சென்னை: தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் நடித்து வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் ‘கானி’ என்ற படத்தில் ‘கூட்தே’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். மேலும் ‘குர்துண்ட சீதாகாலம்’, ‘எஃப் 3’, ‘போலா சங்கர்’, ‘தட் ஈஸ் மகாலட்சுமி’ ஆகிய படங்களிலும், இந்தியில் ‘போலே சூடியன்’, ‘பிளான் ஏ பிளான் பி’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அவர், விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ‘என் திருமணத்தைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தி. இன்னும் 2 வருடங்கள் கழித்தே என் திருமணத்தைப் பற்றி யோசிப்பேன். தற்போது சினிமா மற்றும் வெப்தொடரில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: