குடியரசு விழா தாக்குதல் சதி முறியடிப்பு பஞ்சாப்பில் அதிபயங்கர ஆயுத குவியல் பறிமுதல்

சண்டிகர்: குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் ஒன்று உளவுத்துறைகள் சமீபத்தில் எச்சரித்தன. இதையடுத்து, நாடு முழுவதும் கண்காணிப்பும், சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், பாஞ்சாபில் சில தினங்களுக்கு பாகிஸ்தான் எல்லையில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டம், காசிகோட் கிராமத்தை சேர்ந்த மல்கீத் சிங் என்பவர், சதி செயல்களில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர் கொடுத்த தகவலின் பேரில், குரதாஸ்பூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3,79 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், அதிநவீன கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தக் கூடிய 2 லாஞ்சர்கள், வெடிகுண்டுகளை வெடிக்க  செய்வதற்கான 2 கடிகாரங்கள் போன்றவற்றை போலீசார்  கைப்பற்றினர். இவை பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக கடத்தி வரப்பட்டுள்ளன. இவற்றை பறிமுதல் செய்ததின் மூலம், குடியரசு விழாவை சீர்குலைப்பதற்கான மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட  லாஞ்சர்களில் இருந்து வீசக்கூடிய கையெறி குண்டுகள், 150 மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை. வுிவிஐபி.க்களின் பாதுகாப்புக்கு இவை மிகவும் அச்சுறுத்தலானவை என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: