கால்நடை தீவனத்திற்கு இயந்திரம் மூலம் வைக்கோல் சேகரிப்பு

திருவாடானை : திருவாடானை பகுதியில் தீவனத்திற்காக இயந்திரம் மூலம் வைக்கோல் சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் திருவாடானை தாலுகாவில் நெல் சாகுபடி அதிகளவு செய்யப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இப்பகுதியில் கறவை மாடுகள் வேளாண் தொழிலுக்கு, இணை தொழிலாக செய்து வருவதால் அதற்கு தேவையான தீவனம் சேகரிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

இதனால் இப்பகுதியில் விளையும் நெல் அறுவடை முடிந்ததும் அந்த வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாக விவசாயிகள் சேகரித்து வைத்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் கூலியாட்களை வைத்து வைக்கோலை சேகரித்து ஒரு வருடத்திற்கு மேல் சேமித்து வைத்திருப்பார்கள். இப்போது ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக இயந்திரம் மூலம் வயல்களில் உள்ள வைக்கோலை ஒவ்வொரு கட்டுகளாக சுருட்டி கட்டி வைத்து பின்பு லாரியில் ஏற்றி கால்நடை தீவனங்கள் கொண்டு செல்கின்றனர். மேலும் வெளியூர்களுக்கும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அறுவடை நடந்து வரும் இந்த நிலையில் மழை பெய்தால் வைக்கோல் வீணாகி விடும் என்ற அவசரத்தில் இயந்திரம் மூலம் வைத்து வைக்கோலை சேகரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: