திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் ஏழுமலையான் கோயில் விஐபி டிக்கெட் 10,500.க்கு விற்பனை: ஆந்திர சுற்றுலாத்துறை ஏற்பாடு

திருமலை: திருப்பதி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பக்தர்களுக்கு விரைவில் ஆந்திர சுற்றுலா துறை சார்பில் ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் செல்ல ₹10,500க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் மூலம் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே ஏழுமலையான் கோயில் சார்பில் செயல்பட்டு வரும் வாணி அறக்கட்டளைக்கு ₹10 ஆயிரம்    நன்கொடையாக வழங்கும் பக்தர்களுக்கு 2019ம் ஆண்டு முதல் ஒரு விஐபி தரிசன டிக்கெட் ₹500 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் ஆன்லைனிலும் பக்தர்கள் நன்கொடை செலுத்தி விஐபி டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருப்பதி விமான நிலையத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில்  விரைவில் சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் விமான நிலையத்திலேயே ₹10,500 செலுத்தி பக்தர்கள் விஐபி டிக்கெட் பெறும் விதமாக ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பக்தர்களும் சிரமம் இல்லாமல் விமான நிலையத்திலேயே விஐபி தரிசன டிக்கெட்டை பெற்று நேரடியாக தரிசனத்திற்கு செல்ல முடியும். மேலும் உதான் திட்டத்தின் கீழ் கோயில் நகரத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் விமானங்கள் விரைவில் இணைக்கப்பட உள்ளதால் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: