திருப்பதி காவல்துறைக்கு தேசிய அளவிலான சைபர் கிரைம் புலனாய்வு விருது

திருப்பதி: திருப்பதி காவல்துறைக்கு தேசிய அளவிலான சைபர் கிரைம் புலனாய்வு விருது வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி காவல்துறை எஸ்பி வெங்கட அப்பல நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவிலான சைபர் கிரைம் புலனாய்வு 2021 விருதுகளை திருப்பதி காவல்துறை பெற்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற விர்ச்சுவல் ஆன்லைன் போட்டிகளில் நாட்டிலுள்ள 748 மாவட்டங்களை சேர்ந்த சைபர் கிரைம் புலனாய்வு போலீசார் கலந்து கொண்டனர். இதில், சைபர் கிரைம் காவலர்கள் எவ்வாறு வழக்குகளை கையாள்கிறார்கள் என்பது குறித்தும், தகவல் தொழில்நுட்ப விவரங்கள் குறித்தும் தேர்வுகள் நடைபெற்றது. அதில் திருப்பதியிலிருந்து கலந்துகொண்ட சைபர் கிரைம் எஸ்ஐ சுப்பிரமண்யம் தேசிய அளவில் சிறந்த சைபர் கிரைம் துப்பறிவாளராகவும், தேசிய அளவில் சிறந்த வழிகாட்டியாக திருப்பதி எஸ்பியான நான் தேர்வு செய்யப்பட்டது பெருமையாக உள்ளது. காவல்துறையில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வழக்குகளை முடிப்பதால் நமக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளது. இது மேலும் சிறப்பாக பணிகளை செய்ய உற்சாகப்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: