சென்னிமலை முருகன் கோயில் மலைப்பாதையில் ‘குவி’ கண்ணாடிகள் சேதம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் மலைப்பாதையில் சேதடைந்த ‘குவி’ கண்ணாடிகளை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல 1,320 படிக்கட்டுகள் உள்ளன. மேலும் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்லும் வகையில் 9 வளைவுகளுடன் 4 கி.மீ தூரத்துக்கு தார்சாலை வசதியும் உள்ளது. பக்தர்கள் படிகட்டுகள் வழியாகவும், மலைப்பாதையில் தங்களது வாகனங்கள் மூலமாகவும் வந்து முருகனை வழிபட்டு செல்வர்.

இதில், மலைப்பாதையில் ஒவ்வொரு வளைவுகளிலும் எதிரே வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் எளிதாக தெரிந்து கொள்வதற்காக ‘குவி’ கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், மலைப்பாதையில் 7வது மற்றும் 5வது வளைவில் உள்ள குவி கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதேபோல் மீதமுள்ள குவி கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் உறுதி தன்மை இழந்துள்ளதால், கீழே விழுந்து உடையும் நிலையில் உள்ளது.

எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் மலைப்பாதையில் சேதமடைந்த குவி கண்ணாடிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: