வடகொரியாவில் ஒரே வாரத்தில் 2- வது முறையாக ஏவுகணை சோதனை: அதிபர் கிம் ஜாங் உன்- இன் இச்செயலுக்கு உலகம் முழுவதும் பல நாடுகள் கண்டனம்

பியோங்யாங்: வடகொரியா ஒரே வாரத்தில் 2- வது முறையாக ஏவுகணை சோதனையை நிகழ்த்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர; அணு ஆயுதங்கள் அல்ல என்று கூறினார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரே வாரத்தில் 2 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியது. 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வடகொரியாவின் வெற்றிகரமான ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையில் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைபர் சோனிக் எனும் ஒளியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கும் இந்த ஏவுகணை உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கிம் ஜாங் உன் கலந்து கொண்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் முதன்முறையாக ஏவுகணை சோதனையின் பொழுது அதிகாரபூர்வமாக அவர் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.     

Related Stories: