டெல்லியில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பதிவு

டெல்லி: டெல்லியில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜனவரி மாதத்தில் ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. டெல்லிக்கான அதிகாரபூர்வ தரவுகளை வழங்கும் சப்தர் ஜங் ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 24 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த முறை ஜனவரி மாதத்தில் 1999-ம் ஆண்டில் 46 செ.மீ. மழை பெய்தது.

அதற்கு பிறகு தற்போது 41 செ.மீ. மழை ஜனவரி மாதத்தில் பதிவாகியுள்ளது. நேற்று இரவு வரை பெய்த மழையால் டெல்லியின் முக்கிய பகுதிகளான நியூ பிரிட்டன்ஸ் காலனி, ரிங் ரோடு உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனிடையே டெல்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 90 புள்ளிகள் வரை பதிவானது. இந்த அளவீடு மிதமான பிரிவில் இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டொபர்-க்கு பிறகு முதல்முறையாக காற்றுமாசு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: