தலைப்பாகையை தள்ளி சீக்கிய டிரைவருக்கு அடி: அமெரிக்காவில் தொடரும் இனவெறி

நியூயார்க்: அமெரிக்காவில் இனவெறியாளர்களால் சீக்கியவர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதே போன்ற சம்பவமும் கடந்த 4ம் தேதியும் நடந்துள்ளது. நியூயார்க் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு  வெளியே காத்திருந்த சீக்கிய டாக்சி டிரைவரை, அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென சரமாரியாக அடித்து உதைத்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். 26 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில், சீக்கியரை அந்த நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. மேலும், சீக்கியரின் தலைப்பாகையையும் அவர் கீழே தள்ளி விடுகிறார். அந்த நபர் எதற்காக சீக்கியரை தாக்கினார்? பாதிக்கப்பட்ட சீக்கியரின் பெயர் என்ன? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவத்துக்கு பல்வேறு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை அல்ல.

* 2017ம் ஆண்டு நியூயார்க்கில் சீக்கிய கார் டிரைவரை போதையில் இருந்த பயணிகள் தாக்கி, அவரது தலைப்பாகையை தள்ளி விட்டனர்.

* 2018ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி நியூஜெர்சில் கடை நடத்தி வந்த சீக்கியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

* 2019ம் ஆண்டு வாஷிங்டனில் சீக்கிய  டிரைவரை மர்ம நபர்  இனவெறியை துாண்டும் வகையில்  திட்டி கடுமையாக  தாக்கினார்.

* 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் கலிபோர்னியாவில் உள்ள பூங்காவில்  நடைபயிற்சி செய்த சீக்கியர், மர்ம  நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

Related Stories: