சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு: விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று 2011ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது வலியுறுத்தியிருந்தேன். சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என தேமுதிக சார்பில் முதன் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டோம்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் நேற்று முதல் முறையாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதால் தமிழக மக்களுக்கு நேரில் காணும் வாய்ப்பு அமையும். சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும்.

Related Stories: