கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம் தொடங்கியது. இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கலைவாணர் அரங்கில் எதிர்கட்சியான அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இதில், சட்டப் பேரவை கூட்டத் தொடரை எதிர்கொள்வது, என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுப்பது, ஆளுநர் உரை மீதான நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்வது, என்னென்ன பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கூட்டத் தொடரில் பங்கேற்க அதிமுக எம்எல்ஏக்கள் புறப்பட்டு சென்றனர்.

Related Stories: