இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துசக்தி வடகிழக்கு மாநிலங்கள் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் பேச்சு

இம்பால்:  வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் ரூ.4,815கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  இதனை தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் ேமாடி, பாஜவிற்கு முன் இருந்த அரசானது மணிப்பூரை புறக்கணித்தது. நான் பிரதமரான பிறகு டெல்லியை மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்தேன்.

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்திகளாக மாறும்” என்றார்.  இதனை தொடர்ந்து திரிபுரா சென்ற பிரதமர் மோடி, அங்கு ரூ.3400 கோடியில் கட்டப்பட்ட மகாராஜா பிர் பிக்ராம் விமான நிலையத்தின் 2வது முனையத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அங்கு பேசிய பிரதமர் மோடி, ‘திரிபுராவில் இதற்கு முன் அசைக்கமுடியாதபடி இருந்த ஊழல் வாகனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பின்னடைவு என்பது ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்தது. ஆனால் மாநிலம் இப்போது ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் பின்தங்கியதாக கருதப்பட்ட மாநிலம் பாஜ ஆட்சியின் கீழ் வளர்ச்சியை  நோக்கி நகர்கின்றது’ என்றார்.

Related Stories: