தெலங்கானா போலீசார் அதிரடி கொரோனா பேரிடர் சட்டத்தின் கீழ் பாஜ எம்பி உட்பட 5 பேர் கைது

திருமலை: தெலங்கானா மாநில  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட 317 அரசாணையை உடனே ரத்து செய்யக்கோரி மாநில பாஜ தலைவரும், எம்பியுமான பண்டி சஞ்சய் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

இந்த உண்ணாவிரதம் போலீசார் அனுமதியின்றி நடந்தது. கொரோனா பரவலால் மணகொண்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அங்கேயும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். காவல் நிலையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  இதையடுத்து, பாண்டி சஞ்சயை கரிங்கனார் காவல் பயிற்சி மையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘பண்டி சஞ்சய் உட்பட பலர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட் விதிகளை மீறியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், போலீசாரை தாக்கிய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டி சஞ்சய் உட்பட 5 பேரை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போலீசார் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கரீம்நகர் சிறையில் அடைத்தோம்’’ என்றனர்.

Related Stories: