மதிமுக இளைஞர் அணி செயலாளர் நியமனம்

சென்னை: மதிமுக இளைஞர் அணி செயலாளராக ஆசைத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதிமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: