2022 ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மோடி நிறைவேற்றுவதாக கூறிய 6 வாக்குறுதிகள் எங்கே?: மேற்குவங்க எம்.பி. டெரிக் ஓபிரையன் விமர்சனம்..!!!

டெல்லி: 2022 ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மோடி நிறைவேற்றுவதாக கூறிய 6 வாக்குறுதிகளில் ஓன்று கூட நிறைவேறுவதாக தெரியவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன்  விமர்ச்சித்துள்ளார். இது தொடர்பாக டெரிக் ஓபிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 2022 ஆம் ஆண்டுக்குள் பிரதமர் மோடி நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்குள் அனைவரின் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, மின்சாரம் மற்றும் கழிவறை வசதி, இந்தியாவில் புல்லட் ரயில்கள் ஓடும், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு, இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி 5 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்ததை நாளேடுகளில் வெளியான செய்தியுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.      

Related Stories: