தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோகுல மக்கள் கட்சி மற்றும் தமிழக யாதவ சங்கங்கள் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று சென்னையில் கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் பேசியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்மூலம் யாதவர்களுக்கு மத்திய-மாநில அரசு வேலைவாய்ப்பில் அனைத்து துறைகளிலும் உரிய பங்களிப்பு கிடைக்கும். இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதை எடுத்து சொல்லவே இந்த கவன ஈர்ப்பு அறப்போராட்டம். இன்றைய சூழலில் மிக முக்கியமான கோரிக்கையாக, தமிழக அரசு அனைவருக்கும் கல்வியை கொடுப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வயசு வித்தியாசமின்றி தமிழகத்தில் குடிப்பவர்கள் பெருகிவிட்டனர். குடியால் பல குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே பட்டியல் இனத்தவர்களுக்காக நாடாளுமன்றசட்டமன்ற தொகுதிகள் பல ஆண்டுகளாக தனி தொகுதிகளாகவே இருக்கின்றன. இந்த தனி தொகுதிகளை பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: