லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி ஜெர்மனியில் கைது

புதுடெல்லி: பஞ்சாபில் நீதிமன்ற கட்டிடத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை ெஜர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் கடந்த 23ம் தேதி மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். நீதிமன்றத்தில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காலிஸ்தான் ஆதரவு மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்து இருந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த பாப்பர் கால்சா தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹர்விந்தர் சிங், மேலும் தடை  செய்யப்பட்ட அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பை சேர்ந்த ஜெர்மனியில் இருக்கும் ஜஸ்வந்தர் சிங் முல்தானி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் ஜஸ்வந்தர் சிங் முல்தானி ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க லூதியானா குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஜஸ்வந்தர் சிங் முல்தானி எர்பர்ட் நகரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய போலீஸ் அதிகாரிகள் குழு விரைவில் ெஜர்மனி செல்கின்றது. விவசாயிகள்  போராட்டத்தின்போது வன்முறையை ஏற்படுத்துவதற்காக விவசாய சங்கத்தின் தலைவர் பல்பீர் சிங்கை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: