உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் கட்சி எம்பி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜா மகேந்திரா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜா மகேந்திரா என்கிற மகேந்திர பிரசாத் (81) உடல்நலக் குறைவால் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1985ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ராஜா மகேந்திரா, 1980ம் ஆண்டு முதன்முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக எம்பியாக பணியாற்றிய இவர், ஆரம்பத்தில்  காங்கிரஸ் கட்சியில் இருந்து பின்னர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலும், அதன்பின் ஐக்கிய ஜனதா தளத்திலும் சேர்ந்தார். பிரபல மருந்து நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.4,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இவர், 1940ம் ஆண்டு ஜெகனாபாத் கோவிந்த்பூர் கிராமத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தில்  பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: