பெய்ஜிங்கில் செயற்கை நுண்ணறிவு போட்டியில் பங்கேற்க சீனாவில் குவிந்து வரும் அதிநவீன வகை ரோபோக்கள்

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற உள்ள artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ள ரோபோக்களின் செயல்திறன்கள் குறித்த காணொளி இணைய விரும்பிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. செஸ் விளையாடுதல், டிரம்ஸ் இசைத்தல், மசாஸ் செய்தல் என அனைத்து விதமான திறன்களையும் வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ரோபோக்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா நாடுகளில் உருவாக்கப்பட்ட விதவிதமான ரோபோக்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவகங்களில் உணவு வழங்குகின்றன. மிச்சிகன்  பல்கலைக்கழகத்தில் தயார் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோ, உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்கின்றன.

கண்ணசைவு, தலையசைவு என மனிதர்க்கு இணையாக எந்திரனை படைத்துள்ளனர் இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள். கைகளை நீட்டினால் உங்கள் நகங்களுக்கு பாலிஷ் போட்டுவிடும் ரோபோக்கள் ஷான்பிரான்சிஸ்கோவின் படைப்பு. பல்வேறு விலங்குகளின் அசைவுகளை அச்சுப்பிறழாமல் செய்யும் வகையிலான ரோபோக்கள் காவல்துறை, ராணுவம் என பல்வேறு துறைகளுக்கு உதவும் ரோபோக்கள் என அசந்து போகும் பலவிதமான தயாரிப்புகள் சீனாவில் குவிந்துள்ளன. இவையனைத்தும் சீனாவில் விரைவில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 300 ரோபோ தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.             

Related Stories: