சன்னி லியோனின் ஆபாச குத்தாட்டம்: மதுரா பூஜாரிகள் அமைப்பு எதிர்ப்பு

மதுரா: பாலிவுட் நடிகை சன்னி லியோனின் ஆபாச குத்தாட்டத்திற்கு மதுரா பூஜாரிகள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சரேகமா மியூசிக் என்ற நிறுவனம் ‘மதுபன்’ என்ற  தலைப்பில் இசை வீடியோவை வெளியிட்டது. பாலிவுட் நடிகை கனிகா கபூர் மற்றும்  பாடகர் அரிந்தம் சக்ரவர்த்தி பாடிய இந்த பாடலில் சன்னி லியோனின் ஆட்டமும்  இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ஆபாசமாக இருப்பதாகவும், மத உணர்வுகளை  புண்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த கோயில் பூஜாரிகள், சன்னி லியோனின் சமீபத்திய வீடியோ ஆல்பத்தை தடை செய்யக் கோரியுள்ளனர்.  இதுகுறித்து விருந்தாபன் நிறுவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறுகையில், ‘பாலிவுட் நடிகை சன்னி லியோன் ‘மதுபன் மே ராதிகா நாச்சே’ பாடலில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஆபாச நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடல் 1960ம் ஆண்டு கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபியால் பாடப்பட்டது. இந்த பாடல் ஆல்பத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

மாநில அரசு சன்னி லியோன் மற்றும் அவரது குழுவினர் மீது எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்வோம். மேலும் ஆபாச காட்சியை நீக்குவது மட்டுமின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவில் இந்த ஆல்பத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என்றார். அதேபோல் அகில பாரதிய தீர்த்த பூஜாரிகள் மகாசபாவின் தேசியத் தலைவர் மகேஷ் பதக்கும், சன்னி லியோனின் நடன வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: