10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான், ஈரான், துருக்கி நாடுகளை இணைக்கும் சரக்கு ரயில் போக்குவரத்து

இஸ்லாமாபாத்: மண்டல இணைப்பு மற்றும் வணிக மேம்பாட்டுக்காக பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய 3 நாடுகளை இணைக்கும் சரக்கு ரயில் போக்குவரத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  இஸ்லாமாபாத்தில் உள்ள மர்கலா ரயில் நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத்-தேஹ்ரான்-இஸ்தான்புல் இடையே இயங்கும் சரக்கு ரயிலை ரயில்வே அமைச்சர் அசாம்கான் சவாதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பிரதமர் இம்ரான்கானின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் துருக்கி, ஈரான், கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் தூதர்கள் பங்கேற்றனர். இந்த சரக்கு ரயில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை மர்கலா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஈரானில் உள்ள ஜெகிதான் ரயில் நிலையம் வழியாக இஸ்தான்புல் சென்றடையும் என்று ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: