விருதுநகரில் புதிதாக திறக்கப்படும் மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் ஆய்வு: ஒமிக்ரான் பரவலை சமாளிக்க 1.25 லட்சம் படுக்கைகள் தயார்..!!

விருதுநகர்: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக  மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். விருதுநகரில் பணிகள் நிறைவுற்ற மருத்துவக்கல்லூரியை நேற்று பார்வையிட்ட அவர் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், உணவுக்கூடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கூறினார்.

ஒமிக்ரான் வேகமாக பரவும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர், முகக்கவசம் அணிவது, இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவதன் மூலமாக வைரஸ் பரவலுக்கான சங்கிலியை உடைக்க முடியும் என தெரிவித்தார். கடந்த ஆட்சியில் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் கையிறுப்பு இருந்த நிலையில் தற்போது 1,400 மெட்ரிக் டன்  கையிறுப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் தான் அதிகளவில் மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.       

Related Stories: