பார்லி. காங்கிரஸ் குழு அறிவிப்பு: கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கு செயலாளர்கள், பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவரும், நாடாளுமன்ற குழுவின் தலைவரான சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் குழுவின் (சிபிபி) செயலாளர்களாக கட்சியின் எம்பிக்கள் சாந்தோக் சிங் சவுத்ரி, எம்.கே.ராகவன், அமீ யாஜ்னிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாளராக டி.கே.சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர்களாக தீபிந்தர் சிங் ஹூடா, குர்ஜீத் சிங் அஜ்லா, பிரத்யுத் போர்டோலோய், பிரதிபா சிங், கார்த்தி சிதம்பரம், ஜஸ்பீர் சிங் திம்பா, நகுல் நாத், சு.திருநாவுக்கரசர், பிரான்சிஸ்கோ சர்தினா, கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, அடூர் பிரகாஷ், கீதா கோடா, பென்னி பெஹனன், சுரேஷ் தனோர்கர், முகமது ஜாவேத், ராஜ்மோகன் உன்னிதன், புலோ தேவி நேதம், நரன்பாய் ஜே ரத்வா, ஷம்ஷர் சிங் துல்லோ, ஜி.சி.சந்திரசேகர், நீரஜ் டான்கி, பிரதீப் தம்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: