டெல்லி அருகே நொய்டா விளையாட்டு திட்டத்தில் முறைகேடு: சிஏஜி அறிக்கை

டெல்லி: டெல்லி அருகே நொய்டா விளையாட்டு  திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நொய்டா விளையாட்டு நகரம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு, 826 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டது. தகுதியற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகைகள் அளித்த வகையில் அரசுக்கு ரூ.9,000 கோடி இழப்பு என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. நில ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் விளையாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்காமல் அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்றன. 2016-19க்குள் விளையாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும் என்ற நிபந்தனையும் நிறைவேற்றவில்லை. Rightwards arrow புதிதாக அமைக்கப்படும் இந்த விளையாட்டு நகரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

Related Stories: