முதலாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு பிஏபி பகிர்மான கால்வாய்களை தூர் வாரும் பணி தீவிரம்

உடுமலை :  முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பிஏபி பகிர்மான கால்வாய்களை தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி பாசன பகுதியில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. நான்காம் மண்டலம் நிறைவுபெறும் நிலையில், முதலாம் மண்டலத்துக்கு வரும் 25ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் பாசன கால்வாய்களை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் தூர்வாரும் பணி துவங்கி உள்ளது. முதலாம் மண்டல பகுதியில் உள்ள பிரதான கால்வாய், பகிர்மான கால்வாய், மடை வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் எளிதாக செல்லும்.முதலாம் மண்டல பாசன பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: