கூடலூரில் 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்

 

கூடலூர்: நீலகிரி: கூடலூர் அருகே ஊசிமலை காட்சி முனையில் இருந்து 150 அடி பள்ளத்தில் விழுந்த நபரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க முயன்றபோது பாறையில் இருந்து வழுக்கி 150 அடியில் பள்ளத்தில் இளைஞர் விழுந்துள்ளார். 3 மணி நேரத்துக்கு மேலாக பாறையின் இடுக்கில் சிக்கியுள்ள இளைஞரை மீட்கும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதாலும் வனவிலங்கு நடமாட்டம் இருக்கும் என்பதாலும் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் வெலிங்டன் ராணுவ வீரர்களின் உதவியை நாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: