சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில்  இந்த வருட மண்டல காலபூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து   வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்து தான் பெருமளவு பக்தர்கள் வருகின்றனர். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் வரும் நாட்களில்  பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சன்னிதானத்தில் மட்டும் புதிதாக ஒரு எஸ்பி தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: