கன்னியாகுமரியில் 2வது நாளாக கடல் சீற்றம்: ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சூறாவளி காற்று காரணமாக இன்று 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆகவே இன்றும் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐயப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை சீசன் களை கட்டி உள்ளது. இந்த ஆண்டு சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரிக்கும் வருகின்றனர். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மனை தரிக்கின்றனர். மேலும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுமூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்கின்றனர்.

நேற்று சூறாவளி காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் படகு சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றும் 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் படகு சேவை நடைபெறவில்லை. விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்வதற்காக ஆர்வத்துடன் வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ெகாரோனா அச்சம் குறைந்துள்ளதாலும், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும் கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: