வேலூர் மாநகராட்சி மக்களுக்கு மீண்டும் பொன்னையாற்றில் இருந்து தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம்-கப் அண்டு சாசரில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்க நடவடிக்கை

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைகாரணமாக, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு பைப்லைன்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதேபோல் பொன்னையாற்றில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைன்களும் மழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் பொன்னையாற்றில் உள்ள 10 கிணறுகள், 25 ஆழ்துளை கிணறுகள் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது தடைபட்டது. அதேபோல் பாலாற்றில் இருந்து வரும் குடிநீரும் தடைபட்டது. மேலும் இறைவன்காடு, மேல்மொணவூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது தடைபட்டது.

மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை கொண்டு, பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய உத்தரவிட்டார். அதன்ேபரில், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அறிவுறுத்தலின்பேரில், உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் பொன்னையாற்றில் பழுதாகி கிடந்த பைப்லைன்களை உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையிலான பணியாளர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொன்னையாற்றில் குடிநீர் பைப்லைன் சீரமைக்கப்பட்டதன்பேரில், நேற்று அதிகாலை முதல் பொன்னை ஆற்றில் இருந்து தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யத்தொடங்கப்பட்டது.

மேலும் சத்துவாச்சாரி மலையில் உள்ள கப் அண்டு சாசர் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் அங்குள்ள 3.50 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலை கப் அண்டு சாசர் நீர்வீழ்ச்சியில் இருந்து, அதிகளவில் தண்ணீர் கிடைப்பதால், அதனை பொதுமக்களுக்கு வழங்க, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் மணிவண்ன், உதவி கமிஷனர் மதிவாணன், உதவி செயற்பொறியாளர் பழனி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி மக்களுக்கு  தினமும் 62 எம்எல்டி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

காவிரி கூட்டு குடிநீர், பாலாறு இறைவன்காடு, மேல்மொணவூர், கருகம்பத்தூர் ஆகியவற்றின் குடிநீர் பைப்ைலன்கள் சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை கொண்டு 25 எம்எல்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே பொன்னையாற்று குடிநீர் ைபப்லைன்கள் சீரமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் தொடங்கியுள்ளது. சத்துவாச்சாரியில் கப் அண்டு சாசர் நீர்வீழ்ச்சியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கூடுதலாக மக்களுக்கு வழங்க ஆய்வு செய்யப்பட்டது, மேலும் அதனை சுத்திகரித்து வழங்க முடியுமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம், என்றார்.

Related Stories: