மாமல்லபுரம் தெற்காசிய மண்டல மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கோவிட் வாரியர் விருது

மாமல்லபுரம்: மாமல்லபுரம்  அருகே பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில், 3 நாள் நடந்த தெற்காசிய மண்டல  மாநாட்டில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கோவிட்  வாரியர் விருது வழங்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு  கடற்கரை சாலையொட்டி உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பன்னாட்டு ரோட்டரி  சங்கம் சார்பில், கடந்த 10ம் தேதி தொடங்கி 3 நாள் தெற்காசிய மண்டல மாநாடு  நடந்தது. இந்த, மாநாட்டை பன்னாட்டு ரோட்டரி சங்க தலைவர் சேகர் மேத்தா  தொடங்கி வைத்தார். மாநாட்டு, இறுதி நாளான நேற்று தமிழக மக்கள் நல் வாழ்வு  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள்  குறித்து வாழ்த்தி பேசினார்.

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்று, பம்பரம்  போல் சுழன்று கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்  மா.சுப்பிரமணியனுக்கு, பன்னாட்டு ரோட்டரி சங்கம் சார்பில், ‘கோவிட் வாரியர்  விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது;  இந்த, ரோட்டரி சங்கம் உலகில் அடித்தட்டு மக்களுக்கு ஏராளமான தொடர்  சாதனைகளைப் புரிந்து வருகிறது. இந்த, உலகில் போலியோ நோய் இல்லாமல்  இருப்பதற்கு முழு முதல் காரணமாக இருப்பது ரோட்டரி சங்கமாகும். இதற்கு,  ரோட்டரி சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 3 நாள்  நிகழ்ச்சியில் இறுதி நாளான இன்று (நேற்று) கலந்து கொண்டேன். 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான மாநகராட்சி நிர்வாகத்தின்போது, தற்போது உள்ள தமிழக  முதல்வரின் வழிகாட்டுதல் படி ஒரே நாளில் சென்னை மாநகரில் இருக்கின்ற 155  வட்டங்களிலும், 155 மருத்துவ முகாம்கள் நடத்தி ஏழை எளியோர்கள் பயன்பெறும்  வகையிலான மழைக்கால மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

அப்போது, ரோட்டரி  சங்கம் 50க்கும் மேற்பட்ட வட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு  எங்களுக்கு உதவியாக இருந்தது. அந்த, நிகழ்வுக்கு பின்னால் ஒரே நாளில்  மருத்துவ பயன் பெற்றவர்கள் 63 ஆயிரம் பேர். அன்று, இந்தியாவின் சாதனையாக  கருதப்பட்டு ஒரே நாளில் 155 முகாம்களில் 63 ஆயிரம் பேர் மருத்துவ பயன்  பெற்றவர்கள் என்கின்ற வகையில் லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை மாநகராட்சி  முதன்முறையாக இடம்பிடித்தது.

அதேபோல், இன்றைக்கும் பேரிடர் காலத்தில் முதல்வர் அனைவருடனும் கைகோர்த்து இந்த  மக்களை மீட்டெடுப்போம் என்ற கோரிக்கைக்கு செவி சாய்த்து, ரோட்டரி  சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடரில் இருந்து மீண்டு  வருவதற்கு உதவியாக இருந்தார். இப்படிப்பட்ட, தன்னார்வ தொண்டு நிறுவனம்  இன்றைக்கு குறிப்பாக இந்தியாவில் 155 ஆண்டுகால ரோட்டரி சங்கத்தில்  இந்தியாவிலிருந்து சேகர் மேத்தா என்பவர் உலக தலைவராக பொறுப்பேற்று இருப்பது  என்பது ஒரு சிறப்பான விஷயம்.

கடைசி நாளில் நான் கலந்து கொண்டது எனக்கு  கிடைத்த அரும்பெரும் வாய்ப்பு. 18 வயது  நிரம்பிய அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இது, கட்டாயம் என  சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: