குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்தில் சிக்கியது

கோவை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் காவலர்கள் உயிர் தப்பினார்கள். குன்னூரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வந்தார். இதனை அடுத்து முதல்வர் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் முதல்வர் கோவை விமான நிலையத்திற்கு சென்றார்.

இந்நிலையில் அவர் பாதுகாப்பு பணிக்காக வந்த திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் வரும் போது வீல் ஆக்சில் துண்டிப்பு ஏற்பட்டு விபத்தில் சிக்கியது. ஒட்டுநரின் சமர்த்தியத்தால் வாகனம் அருகில் உள்ள பாறையில் மோதி நின்றது. இதில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன் செய்த நிலையில் 3 காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

Related Stories:

More