கர்நாடக மாநில பாஜ தலைவராகிறார் சி.டி.ரவி? பாஜ மேலிடம் முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் 2023ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ளதால், மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பாஜ ஆட்சி பிடிக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக பலவழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. வீரசைவ லிங்காயத்து வகுப்பை சேர்ந்த எடியூரப்பா முதல்வராக இருந்தார். ஆட்சி தலைமை மாற்றம் செய்தபோது, அதே வகுப்பை சேர்ந்த பசவராஜ்பொம்மைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு முதல்வராக இருக்கிறார்.

இதனிடையில் மாநிலத்தில் ஒக்கலிக வகுப்பினரின் ஆதரவு பாஜவுக்கு குறைவாக உள்ளதால் மைசூரு, மண்டியா, ராம்நகரம், துமகூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்பார்த்த மக்கள் பிரதிநிதிகள் கிடைக்காமல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில்  ஒக்கலிக்க வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி ெகாடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைமை முன்னாள் மாநில அமைச்சரும் தற்போது பாஜ தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவியை கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்யும்படி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. மாநில தலைவராக இருக்கும் நளின்குமார் கட்டீல், கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபடவில்லை என்ற அதிருப்தியும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநில தலைவராக சி.டி.ரவி நியமனம் செய்ய பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories:

More