சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்தவர் ரஞ்சனா நாச்சியார். மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியார் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்தார். தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் ரஞ்சனா நாச்சியார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
