உளுந்தூர்பேட்டையில் பயனற்ற மின்மாற்றி கம்பங்கள்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை நகராட்சி கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியில் உள்ள நியாயவிலை கடை எதிரில் உள்ள பொதுமக்கள்  பயன்பாட்டிற்காக விடப்பட்ட சாலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்னர்  மின்வாரியத்தின் மூலம் மின்மாற்றி வைக்கப்பட்டது. இதற்கு அப்போது இந்த  பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட சாலையில் மின்மாற்றி வைத்தால் எப்படி செல்வது என மின்மாற்றி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கம்பங்கள் மட்டும் நடப்பட்டு மின்மாற்றி வைக்கப்படாமல் பணிகள் பாதியில்  நிறுத்தப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருவரையில் மின்மாற்றி வைக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ள மின்மாற்றிக்காக அமைக்கப்பட்ட மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வருவாய்துறையின் சார்பில் உரிய அளவீடுகள்  செய்து பொதுமக்கள் செல்லும் வழியில் உள்ள முள்செடிகளை அகற்றி தார் சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: