குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவை முன்கூட்டியே விசாரிக்க கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவை முன்கூட்டியே விசாரிக்க கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசியதாக கைதான மதன் மீது ஜூலை 5-ல் குண்டர் சட்டம் பாய்ந்தது. கை குழந்தையுடன் தன் மனைவி உடல் நலக்குறைவால் சிரமப்படுவதால் அவருக்கு சிகிச்சை தர வேண்டி உள்ளது, கடுமையான குற்றச்சாட்டால் குண்டர் சட்டத்தில் கைது போன்ற காரணத்துக்காக வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி பப்ஜி மதன் மனு தாக்கல் செய்திருந்தார்.

Related Stories:

More