வேலூர் கோட்டை கோயிலில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அகழி நீர் வெளியேறும் கால்வாய் கண்டறிந்து தூர்வாரும் பணி தொடக்கம்: 30 ஆண்டுகள் கால்வாய் பராமரிக்காததால் ஏற்பட்ட விளைவு

வேலூர்: வேலூர் ேகாட்டை கோயிலில் தேங்கிய மழைநீரை வௌியேற்ற அகழி நீர் வெளியேறும் கால்வாய் கண்டறிந்து தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக கால்வாய் பராமரிக்காததால் இப்படி கோட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கும் விளைவு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழைகாரணமாக நீர்நிலைகள் நிரம்பியது. அதேபோல் வேலூர் ேகாட்டை அகழியிலும் நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் ஜலகண்டேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேங்கி நிற்கும் மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினாலும் மீண்டும், மீண்டும் தண்ணீர் அதே அளவில் சேர்ந்துவிடுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நேற்று முன்தினம் கோயில் கருவறையிலும் தண்ணீர் புகுந்தது. இருப்பினும் மூலவருக்கு வழக்கமான அபிஷேக, அலங்கார ஆராதனைகளை முடித்துவிட்டு உற்சவ மூர்த்திகளை ராஜகோபுரத்தின் கீழே நந்தீஸ்வரர் வாகனத்தின் மீது வைத்து பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அகழியின் உபரிநீரை பாலாற்றுடன் இணைக்கும் கால்வாய் செல்லும் புதிய மீன்மார்க்கெட்டை ஒட்டியுள்ள பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமலேயே விட்டுவிட்டனர்.  இதுதொடர்பாக தினகரனில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், இந்திய தொல்லியல்துறை வேலூர் கோட்ட முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ், நீர்வளத்துறை உதவி செயற்ெபாறியாளர் விஸ்வநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கால்வாய் தூர்வாரும் பணியில் ேநற்று ஈடுபட்டனர். அப்ேபாது கோட்டை அகழியில் தண்ணீர் அதிகரித்திருந்ததால் நீர் வெளியேறும் கால்வாய் 30 ஆண்டுகளாக சீரமைக்காமல் இருந்த இடம் தெரியவில்லை.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கால்வாய் இருக்கும் இடம் கண்டறிந்து, தூர்வாரும் பணிகள் ேமற்ெகாண்டனர். ெதாடர்ந்து இப்பணிகள் ேமற்ெகாள்ளப்பட்டு வருகிறது.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அகழியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கால்வாயை கண்டறிந்துள்ளோம். அதனை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வேளை அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் வெளியேறாவிட்டாலும் மாற்று ஏற்பாடாக, கால்வாய் வரும் பகுதிகளில் பழைய பெங்களூரு சாலையில் பள்ளம் தோண்டி தண்ணீர் வெளியேற்றப்படும். அகழியில் இருந்து மொத்த தண்ணீரும் வெளியேறாத வகையில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளோம். அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் கால்வாய் இனி வரும் காலங்களில் தூர்ந்து போகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: