உருமாற்றம் அடைந்து இருக்கும் ஓமிக்ரான் கிருமி, இந்தியாவிலும் நுழைந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம் : நிபுணர்கள்

டெல்லி : 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் உருமாற்றம் அடைந்து இருக்கும் ஓமிக்ரான் கிருமி, இந்தியாவிலும் நுழைந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நவீன மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருக்கும் பிரபல நுண் உயிரியிலாளர் ககன்தீப் காங், இதுவரை 12 நாடுகளில் அடையாளம் காணப்பட்டு இருக்கும் ஓமிக்ரான் கிருமி, இந்தியாவிலும் நுழைந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

நம்முடைய நாட்டின் ஜீனோம் சீகுவன்ன்ஸிங் எனப்படும் ஓமிக்ரான் தொற்றை கண்டறியும் சோதனை முறை வேகமானது அல்ல எனக் கூறும் அவர், இதனால் இந்தியாவில் ஓமிக்ரான் நுழைந்துள்ளதா என்பது விரைவாக தெரியவில்லை என்றார். மாதிரிகளை சேகரித்து ஒரு மாதத்திற்கு பிறகு வெளியாகும் முடிவுகளால் பலன் ஏதும் இல்லை என்று கூறி இருக்கும் டாக்டர் ககன் தீப், இது போன்ற சோதனை முறைகளால் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜீனோம் சீகுவென்ஸிங் எனப்படும் மரபணு வரிசைமுறை சோதனையை வேகபடுத்துவதுடன் ஓமிக்ரான் தொற்றை விரைவில் கண்டறியும் எஸ் ஜீன் PCR சோதனையை அறிமுகம் செய்வதில் அரசு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் டாக்டர் அறிவுறுத்தி உள்ளார். அப்போது தான் ஓமிக்ரான் தொற்றினை துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிய முடியும் என்று டாக்டர் காங் கூறியுள்ளார்.

Related Stories: