கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 4 நாட்களில் 5 பழங்குடியின குழந்தைகள் உயிரிழப்பு!: கேரள அமைச்சர் நேரில் ஆய்வு..!!

பாலக்காடு: தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள அட்டப்பாடியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 4 நாட்களில் 5 பழங்குடியின குழந்தைகள் உயிரிழந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது அட்டப்பாடி மலை கிராமம். 40 ஆயிரத்திற்கும் அதிகமான பழங்குடியின மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாட்டால் பிறந்த குழந்தைகள் அதிகம் உயிரிழந்தனர். இவ்விவகாரம் அப்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்ற பிரச்னை தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

அட்டப்பாடியில் கடந்த 4 நாட்களில் ஒரு பெண் உள்பட 5 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர். இது அங்கு வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கேரள பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், அட்டப்பாடியில் நேரில் ஆய்வு செய்தார். ஊட்டச்சத்து குறைபாடு மட்டுமின்றி, பாரம்பரிய நோய் காரணமாகவும் குழந்தைகள் இறந்திருப்பதாக கூறிய அவர், அட்டப்பாடிக்கு என தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories: