பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: 60 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் வௌியேற்றப்படுவதால் 60 கிராமங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் திருவள்ளுர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து திருவள்ளுர் சுற்றியுள்ள பகுதிகளான ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவலங்காடு ஆகிய பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 12000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு நேற்று முன்தினம் 7720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியிலிருந்து நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 12000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பூண்டி நீர்த்தக்கத்திலிருந்து உபரி நீர் வினாடிக்கு 12000 கனஅடிகொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: