நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும் தற்போது கிடைக்கிறது: அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் மோடிபேச்சு

டெல்லி: அரசியல் சாசனத்தின்படி குடுமக்களின் உரிமைகளை காக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் அல்லது தேசிய சட்ட தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1949ம் ஆண்டில் இதேநாளில் இந்திய அரசியலமைப்பு சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூரும் வகையில், அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2015ம் ஒன்றிய பாஜக அரசு அரசு ஆணை பிறப்பித்தது. அதையடுத்து இன்றைய தினம் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில்பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்; அரசியல் சாசனத்தின்படி குடுமக்களின் உரிமைகளை காக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரையும் சமமாக கருத வேண்டும். அரசு இதனை சரியாக கடைபிடிக்கிறது. பல பிரச்சனைகள் ஏற்பட்ட போதும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியலமைப்பு உதவியது. நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும் தற்போது கிடைக்கிறது. அரசியலமைப்பு சட்டம் எந்த மனிதருக்கும் வேறுபாடு பார்ப்பதில்லை.

அரசின் நடவடிக்கையால் விவசாயிகளுக்கு சமூகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் காலதாமதம் கூடாது. வேளாண் உற்பத்தில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இடமாக கட்ச் மாவட்டம் திகழ்கிறது. காலனி ஆதிக்கம் தற்போது எங்கேயும் இல்லை. இந்திய மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக் கொண்டுள்ளனர்.

இந்திய மக்கள் பூமியை கடவுளாக கருதுகின்றனர். ஜி20 நாடுகள் சொல்லும் திட்டத்தை இந்தியா முன்கூட்டியே முடிக்கும் வல்லமை பெற்றுள்ளது. நமது நாட்டை இளைஞர்கள் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கின்றனர். நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும் தற்போது கிடைக்கிறது இவ்வாறு பேசினார்.

Related Stories: