செங்கை, காஞ்சி மாவட்டங்களில் வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலங்கள்: அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை வேண்டும்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை - ராஜகுலம் வரை செல்லும் புறவழிச்சாலையை ஒட்டி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் இந்த புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதேபோல், வாலாஜாபாத் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து மூலப் பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், இந்த சாலை வழியாகவே ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கு தினமும் சென்று வருகின்றன.

இந்த புறவழிச்சாலையை ஒட்டியுள்ள கரூர் கிராம பகுதியில் ஒரு தரைப்பாலம் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட இந்த தரைப்பாலத்தின் மேல்பகுதியில், தற்போது சிதலமடைந்து, சாலைகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதில் கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் மட்டுமின்றி, பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் அச்சத்துடன் கடக்கின்றனர். இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ,இந்த பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் சூழல் தினமும் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, இந்த தரைப்பாலம் மேலும் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே, பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக தரைப்பாலத்தை ஆய்வு செய்து, அதனை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஏரிகள், குளங்கள் நிரம்பி தண்ணீர் வநழிந்தோடுகிறது. ஏரிகளில் உள்ள கலங்கல்கள் வழியாக உபரிநீர் செல்கிறது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள ஈசூர்  வள்ளிபுரம் பாலாற்று தரைப்பாலம், பழையனூர்  மணப்பாக்கம் தரைப்பாலம், இரும்புலிச்சேரி பாலாற்று பாலம், வாயலூர் பாலாற்று பழைய மேம்பாலம், கரும்பாக்கம்  ரெட்டிப்பாளையம் தரைப்பாலம், கிளியாறு தரைப்பாலம், கடப்பாக்கம்  செய்யூர் தரைப்பாலம் உள்பட 15 தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளன.

Related Stories: