கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நடுவே உள்ள மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஆற்றின் நடுவே உள்ள மரங்கள் தான் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். விளைநிலங்களில் ஆற்று மணல் படிந்துவிட்டதால் இனி வரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆற்றின் நடுவே ஆங்காங்கே வளர்க்கப்பட்டு வரும் மரங்களால் தான் நாணமேடு, உச்சிமேடு போன்ற பகுதிகளில் கரையோரம் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தென்பெண்ணை ஆற்றில் ஆங்காங்கே உள்ள மரங்களை உடனே அகற்ற வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வந்துவிட முடியும் என்றபோதிலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆற்று மணல் விளைநிலங்களில் படிந்துள்ளதால் இனி வரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியுமா என்கிற கவலை விவசாயிகள் மனதில் எழுந்துள்ளது.  

Related Stories: